UAE Tamil Web

ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது? – அபுதாபியில் குடியிருந்த வீட்டில் 12 ஏசிக்களைத் திருடிய உத்தமர்..!

AC Stealing

அபுதாபியில் தனது வீட்டில் குடியிருந்த நபர், வீட்டைக் காலி செய்யும்போது 12 ஸ்பிலிட் ஏசிக்கள் மற்றும் அலுமனிய படிக்கட்டுகளைத் திருடிவிட்டதாக வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், குடியிருந்தவரிடம் 1 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடாக பெற்றுத்தரும்படி தனது மனுவில் குறிப்பிட்டுளார் வீட்டின் உரிமையாளர்.

- Advertisment -

அபுதாபி குற்றவியல் நீதிமன்றம், குடியிருப்பாளரை குற்றவாளியாக அறிவித்தது. இழப்பீட்டுத் தொகையை வழங்கியவுடன் அவர் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இழப்பீட்டுத் தொகையை கணக்கிட நீதிமன்றமே நடுவர் ஒருவரை நிர்ணயித்தது.

வீட்டின் உரிமையாளர் தொலைந்து போன பொருட்களுக்கான பில் அல்லது இன்வாய்சை சமர்ப்பிக்கவில்லை என நடுவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இறுதியாக தொலைந்துபோன பொருட்களுக்கான விலை பயன்படுத்தபடுவதற்கு முன்னர் 55,108 திர்ஹம்ஸ் எனவும், பயன்படுத்தப்பட்ட பின்னர் 13,777 திர்ஹம்ஸ் எனவும் நிர்ணயிப்பதாக தெரிவிக்க, வீட்டின் உரிமையாளரும் அதனை ஒப்புக்கொண்டார்.

இறுதியாக, குடியிருந்த வீட்டில் ஆட்டையைப் போட்ட ஆசாமி 13,777 திர்ஹம்சை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் மேலும் சட்ட செலவுகளையும் ஏற்கவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.