UAE Tamil Web

வீடியோ: காரில் வட்டம் போட்ட இளைஞர்களுக்கு கட்டம் கட்டிய காவல்துறை..!

car

அல் அய்ன் பகுதியில் நேற்று இரவு துவங்கி காலை வரையில் சக சாலை உபயோகிப்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் காரில் சாகசம் செய்த 3 இளைஞர்களை அபுதாபி காவல்துறை கைது செய்திருக்கிறது.

சாகசம் செய்தது மட்டுமல்லாமல் அதனைப் பார்க்க ஒரு கூட்டமே திரண்டிருக்கிறது. இதன்காரணமாக கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

அபுதாபி காவல்துறையின் மைய செயல்பாட்டுத் துறையின் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் அகமது சைஃப் பின் சைதூண் அல் முஹைரி,” இவர்கள் பொருள் மற்றும் உளவியல் ரீதியான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களது மற்றும் சக சாலை உபயோகிப்பாளர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விளைவித்திருக்கின்றனர். இதனையடுத்து எங்களது படை அவர்களைக் கைது செய்து மேற்கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சாலை விதிமுறைகளைக் கடைபிடிப்பதன் அவசியம் குறித்து கற்றுத்தர வேண்டும் என முஹைரி குறிப்பிட்டார்.

சாலையில் வாகனங்களை அணிவகுப்பது, சாகசம் செய்வது, அதனை வீடியோ எடுத்து பரப்புவது ஆகியவை சட்டப்படி குற்றமாகும் என அவர் எச்சரித்தார்.

அமீரக போக்குவரத்து விதிகளின்படி, இப்படியான சாகசங்களில் ஈடுபட்டு அவர்களது மற்றும் பிறரது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அல்லது பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தால் அல்லது பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் 2000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மேலும் 23 கரும்புள்ளிகளும் வழங்கப்படும். வாகனங்கள் 60 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும். காரை விடுவிக்க அபராதமாக 50,000 திர்ஹம்ஸ் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

car
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap