UAE Tamil Web

முன்னாள் கணவரின் காரில் சென்று 15 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட மனைவி – விளாசிய நீதிமன்றம்..!

lady drives a car

தனது முன்னாள் கணவரின் காரில் சென்று 15 போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட மனைவியே அதற்கான அபராதத்தை செலுத்தவேண்டும் என அபுதாபி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எமராட் அல் யோம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் தனக்கு 7,290 திர்ஹம்ஸ் தொகையை அவர் (பெண்) தரவேண்டும் எனவும் முழுத்தொகையை கொடுக்கும் வரையில் சட்டப்படி 9 சதவீத பணத்தை அளிக்கவேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிவினையின் போது நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் காரானது பெண்ணிற்கு வழங்கப்பட்டது எனவும், கார் தனது பெயரில் இருப்பதாலேயே போக்குவரத்து அபராதங்களை நான் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்பெண்மணி அந்த அபராதத் தொகையை அவரிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்சிகளின் அடிப்படையில் பெண் செய்த போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகை 3,425 திர்ஹம்சை அப்பெண்மணியே செலுத்தவேண்டும் எனவும், கார் அவரிடத்தில் இருந்ததால் இதற்கு அவரே தார்மீக பொறுப்பேற்கவேண்டும் எனவும் அபுதாபி நீதிமன்றம் தனது முதல் நிகழ்வில் தெரிவித்தது.