UAE Tamil Web

எங்க ராஜா போறீங்க..இவ்வளவு வேகமா? தாறுமாறாக ட்ரக்கை ஓட்டிச்சென்ற நபர் – காவல்துறை விரட்டிப்பிடித்த வீடியோ..!

Truck

அபுதாபி: நெடுஞ்சாலையில் தாறுமாறாக ட்ரக்கை ஓட்டிச்சென்ற நபரை அபுதாபி காவல்துறை விரட்டிப் பிடித்திருக்கிறது. சாலையில் சென்ற சக வாகனங்களை அலறவிட்ட இந்த ஓட்டுனர் 3 விதமான சாலை விதிமுறைகளை நிகழ்த்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

- Advertisment -

அந்த ஓட்டுனர் எப்படி மோசமாக வாகனத்தை இயக்கினார் என்பதை அபுதாபி காவல்துறை வீடியோவாக வெளியிட்டுள்ளது.

தனக்கு எதிரே வரும் வாகனங்களை நெருங்கிச் சென்றும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வாகனங்களை முந்திச்சென்றும் சக வாகனவோட்டிகளிடையே பீதியைக் கிளப்பியிருக்கிறார் இந்த ஆர்வக்கோளாறு ஓட்டுனர். மேலும், சாலைவிதிகள் என்றால் கிலோ என்னவிலை எனக் கேட்பதுபோல அவரது டிரைவிங் இருந்திருக்கிறது.

வாகன விபத்தைத் தவிர்க்கவும், உயிரிழப்பைத் தடுக்கவும் வாகனவோட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.