UAE Tamil Web

(Black Bag Operation).. பணத்திற்காக போதை பொருட்களை கைமாற்றி விடும் வேலையில் இறங்கிய இருவர் கைது..

dubai

துபாய் போலீஸார் போதைப்பொருட்களை கைமாற்றும் வேலையில் ஈடுபட்ட இருவரை அதிரடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 40 கிலோ போதை பொருட்களை(crystal meth) பறிமுதல் செய்துள்ளனர்.

- Advertisment -

சந்தேக நபர்கள் தங்களது கடத்தலுக்கு ஒரு கருப்பு பையை பயன்படுத்தும் நம்பக தகவல் கிடைத்ததால் அவர்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்க திட்டம் தீட்டிய போலீஸார் தங்களது ஆப்பரேஷனுக்கு black bag(கருப்பு பை) என்றே பெயரிட்டனர்.

‘ஆப்ரேஷன் பிளாக் பேக்’ பற்றி தகவல் தெரிவித்துள்ள போதைப்பொருள் தடுப்பு பொதுத்துறை இயக்குநர் பிரிகேடியர் ஈத் முகமது தானி ஹரப், கைது செய்யப்பட்ட ஆசியாவை சேர்ந்த இருவர் தங்களிடம் இருந்த போதைப்பொருளை தொடர்ந்து இடம்மாற்றி கொண்டே இருந்தனர். அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் உரிய அனுமதி பெற்ற பின் போதைப்பொருள் எதிர்ப்புப் பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தன.

துபாய் காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புபோலீஸார் ஆசியர்கள் இருவரை கைது செய்ய நேரத்தை நிர்ணயித்தனர். அவர்கள் கடைசியாக மறைந்திருந்த இடத்திலிருந்து போதை மருந்துகளை எடுத்து, அவற்றை ஒரு கருப்பு பையில் வைத்து, பின்னர் அவற்றை கார் மூலம் வேறு பகுதிக்கு மாற்றினர்.

அப்போது பின் தொடர்ந்து சென்ற போலீஸார் அவர்களது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரினுள் இருந்த கருப்பு பையில் 40 கிலோ போதை பொருள் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.தங்கள் குமபல் தலைவனின் அறிவுறுத்தலின் படி, அதை அவர்கள் மற்றொரு நபரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது என்று அதிகாரி ஹரப் கூறியுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விசாரணையின் போது கூறுகையில், தான் கும்பல் தலைவனின் உறவினர் என்றும், நிதி நெருக்கடி ஏற்பட்டதால் நீங்கள் செய்யும் சட்டவிரோத வேலை எதுவாக இருந்தாலும் அதை கொடுக்குமாறு கேட்டேன். அப்போது அவர்போதை பொருளை கைமாற்றி விடும் வேலையை செய்ய சொன்னதாகவும், அதற்கு ஈடாக 30,000 திர்ஹம்ஸ் தருவதாக கூறியதை அடுத்து தான் இந்த குற்ற செயலில் இறங்கியதாகவும் கூறியுள்ளார்.