UAE Tamil Web

அதிக எடையுடன் இருந்த பை – விமான நிலையத்தில் சிக்கிய ஆசிய இளைஞர்..!

dubai airport

துபாய்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சமீபத்தில் விசிட்டிங் விசாவில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவர் எடுத்துவந்திருந்த உடமைகளின் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

- Advertisment -

பையை சோதனையிட விரும்புவதாக அதிகாரிகள் கேட்கவே, அந்த இளைஞரும் பையினைக் கழட்டி கொடுத்திருக்கிறார். உள்ளே, இருந்த பழப்பெட்டி அளவுக்கு அதிகமாக தடிமனுடனும் எடையுடனும் இருப்பது அதிகாரிகளுக்கு குழப்பத்தை அளித்திருக்கிறது.

பின்னர் அந்த பழப்பெட்டியை சோதனையிட்டதில் அதில் 2 கிலோ ஹாஹிஷ் என்னும் போதைமருந்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை கடத்தி வந்ததாக வழக்குப் பதிவு செய்தது பொது வழக்குத்துறை.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.