இந்த வருடம் மே 4 ஆம் தேதி, வழக்கம்போல் துபாய் காவல்துறை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. அப்போது அடையாள சான்றிதழ்கள் ஏதுமில்லாமல் சுற்றித் திரிந்த நபர் ஒருவரை விசாரிக்கையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே அவரது அடையாள சான்றிதழை காண்பிக்குமாறு காவல்துறை பணித்திருக்கிறது.
திருதிருவென விழித்த அந்த நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டிருக்கிறது காவல்துறை. அதனுள்ளே தடை செய்யப்பட்ட கஞ்சா 1 கிலோ இருந்திருக்கிறது.
உடனடியாக காவல்நிலையத்திற்கு அந்நபர் கூட்டிச்செல்லப்பட்டு அவருக்கு DNA பரிசோதனை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகளைப் பார்த்தபிறகு போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். ஏனெனில் அவர்மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்திருக்கிறது.
குற்றவாளியிடமிருந்து 980.17 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவர் மீதான வழக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.