UAE Tamil Web

துபாய்: 30 மில்லியன் போதை மாத்திரைகளைக் கடத்த முயற்சித்த கும்பல் : ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்கத்துறை – வீடியோ..!

NAT-DUBAI-CUSTOMS1-

ஃபெனிதில்லைன் ஹைட்ரோகுளோரைட் என்றால் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதற்கு மற்றொரு பெயரும் உண்டு. கேப்டாகன். பரிசுத்தமான போதைப்பொருள். துவக்கத்தில் நார்கோலெப்சி, மன அழுத்தம், அதீத செயல்பாடு போன்ற சிக்கல்களுக்கு இந்த மருந்தை பல மருத்துவர்களும் பரிந்துரைத்தனர். ஆனால், போதைக்காக இதனைப் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரிக்கத் துவங்கியதும் அதாவது 1980 களில் இந்த மாத்திரையை உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக தடை செய்தன.

இப்படியான ஆபத்தான மருந்தைத்தான் துபாய் ஜெபல் அலி துறைமுகம் வழியாக கடத்தல்காரர்கள் கொண்டுவரப் பார்த்துள்ளனர். இந்த முயற்சியை துறைமுக சுங்கத்துறை கண்காணிப்பு மைய நிர்வாகம் பல துறை நிபுணர்களுடன் இணைத்து முறியடித்துள்ளது.

இதன்மூலம் 30 லட்சம் கேப்டாகன் மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தாண்டு பிடிபட்டதிலேயே அதிகளவு போதைப்பொருள் கடத்தல் முயற்சி இதுவாகும்.

மையக்கட்டுப்பாட்டு அறை, சியாஜ் கண்காணிப்புக் குழு ஆகியவை சந்தேகத்திற்கு இடமான கண்டெய்னரை ஆய்வு செய்ததில் இந்த கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய கடல் சுங்கத்துறை மைய நிர்வாகத்தின் இயக்குனர் யூசஃப் அல் ஹாஷ்மி,” தாயகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலும் போதைப்பொருள்களில் இருந்து சமூகத்தை காக்கும் வகையிலும் நாங்கள் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். இந்த சோதனை வேட்டையில் பல துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், ரேடியோ ஆக்டிவிட்டி ஸ்கேனர்கள் போன்ற அதிநவீன கருவிகள் மற்றும் K9 யூனிட் (மோப்ப நாய்கள் பிரிவு) ஆகியவை ஈடுபட்டன” என்றார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக ஹாஷ்மி தெரிவித்தார்.

“போதைப் பொருட்களைக் கண்டறியவும், அவற்றை கைப்பற்றவும் நேர்த்தியான திட்டங்களை நாங்கள் பின்பற்றிவருகிறோம். புலனாய்வு அதிகாரிகள் தங்களுடைய மேம்பட்ட அனுபவம் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி இந்த கடத்தல் திட்டத்தை முறியடித்துள்ளனர்” என ஜெபல் அலி மற்றும் டெகாம் ஆய்வு மையத்தின் இயக்குனர் அஹமது சஜுமா அல் ஜாம்ரி தெரிவித்தார்.

NAT-DUBAI-CUSTOMS1-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap