UAE Tamil Web

வாட்ஸ்அப்பில் இளம்பெண்ணுக்கு தவறான மெசேஜ்கள்.! இளைஞருக்கு விதிக்கப்பட்ட வலுவான அபராதம்.. பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு

whatsapp

வாட்ஸ்அப் மூலம் பெண் ஒருவருக்கு தவறான மற்றும் அவமதிப்பு மெசேஜ்களை அனுப்பிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணங்களின் படி, குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மோசமான மற்றும் அவமதிக்கும் செய்திகளை வாட்ஸ்அப் வழியே தனக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டி, இளம் அரபு பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

- Advertisment -

சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டால் என்னென்னெ விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் பிரதிவாதியிடமிருந்து தான் பெற்ற மோசமான மெசேஜ்களையும் அவர் போலீசாரிடம் ஆதாரமாக காண்பித்தார். இந்த விவகாரத்தை விசாரித்த பின், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் பரிந்துரைத்தனர்.

வழக்கை விசாரித்த அபுதாபி சட்ட மீறல் நீதிமன்றம், பிரதிவாதி ஆன்லைன் சட்டத்தை மீறிய குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி, அவருக்கு 250,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்தது. மேலும் சட்டவிரோத செயலினால், ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் தார்மீக சேதங்களுக்கு இழப்பீடு கோர, பிரதிவாதிக்கு எதிராக சிவில் வழக்கு தாக்கல் செய்ய அந்த பெண்ணுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனையை பின்பற்றி பாதிக்கப்பட்ட இளம்பெண் சிவில் கோர்ட்டிற்கு சென்றார். வழக்கை விசாரித்த முதல் நிகழ்வு சிவில் கோர்ட், இளம் பெண்ணுக்கு பிரதிவாதி 20,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இந்த இழப்பீட்டில் திருப்தி அடையாததால் மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் மேல்முறையீடு செய்தார். ஆனால் இளம்பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த மேல்முறையீட்டு சிவில் நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு 20,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்குவதை உறுதி செய்தது. இந்த இழப்பீட்டுத் தொகையைத் தவிர, தவறான வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதற்காக விதிக்கப்பட்ட 250,000 திர்ஹம்ஸ் அபராதத்தையும் பிரதிவாதி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இணைய குற்றங்களுக்கு எதிரான ஃபெடரல் சட்டம் எண் 5 2020-ன் 20-வது பிரிவின்படி , இணையம் அல்லது எந்தவொரு தகவல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ஒரு நபர் குற்றங்களைச் செய்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.