UAE Tamil Web

இளைஞருடன் உல்லாசம் ; சுற்றிவளைத்த காவல்துறைக்கு பயந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

Woman falls to death

ஷார்ஜா : அல் கார்ப் காவல் நிலையத்திற்கு சமீபத்தில் ஒருவர் புகாரளிக்க வந்திருக்கிறார். “எனக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் ஒரு ஜோடி தங்கியிருக்கிறார்கள்” என அவர் கொடுத்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisment -

அல் மஜாரா பகுதியில் இருந்த அந்த கட்டிடத்தை காவல்துறை கண்டுபிடித்த வேளையில், சந்தேகத்திற்குரிய ஈராக்கைச் சேர்ந்த ஆண் மற்றும் பிலிப்பைன்சைச் சேர்ந்த பெண் இருவரும் “தங்களது” வீட்டிற்குள் இருந்திருக்கிறார்கள்.

திடீரென அந்த இடத்தை காவல்துறையினர் சுற்றிவளைக்கவே, சுதாரித்துக்கொண்ட பெண், தப்பிக்க வழி தேடியிருக்கிறார். எல்லா திசைகளிலும் காவல்துறையினர் நிற்கவே, அவர் நின்றிருந்த ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்திருக்கிறார். பலத்த காயமடைந்ததால் அப்பெண் உயிரிழந்திருக்கிறார். அப்பெண்ணுடன் தங்கியிருந்த ஈராக் ஆண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வீட்டு உரிமையாளரின் அனுமதியில்லாமல், இந்த ஜோடி அங்கே குடியேறியிருக்கிறது. வீட்டின் பூட்டை மாற்றி, புதிய ஃபர்னிச்சர்களை வீட்டிற்குள் நிரப்பியிருக்கிறார்கள் இருவரும். அக்கம் பக்கத்தினர் வீட்டு உரிமையாளரிடம் பேசப்போக விஷயம் வெளியே தெரிந்திருக்கிறது.

இந்த வழக்கானது மேற்கட்ட சட்ட விசாரணைகளுக்காக பொது வழக்குத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.