அபுதாபி முதல் நிகழ்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பெண்ணுக்கு 20 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதம் விதித்திருக்கிறது நீதிமன்றம்.
நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஆண் ஒருவருடைய வழக்கின் தீர்ப்பு நகலைத்தான் அப்பெண் வெளியிட்டிருக்கிறார். இதனையறிந்த ஆண், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தார். மேலும் இழப்பீடாக 2 லட்சம் திர்ஹம்ஸ் கிடைக்க வழிவகை செய்யுமாறு அவருடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருடைய (ஆண்) அனுமதியில்லாமல் அவர்குரித்த தகவல்களை வெளியே பகிர்ந்தது குற்றம் என அறிவித்ததோடு 20,000 திர்ஹம்ஸ் அபராதத்தை செலுத்துமாறு அந்தப்பெண்ணிற்கு உத்தரவிட்டது.
தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட பெண், அவரைக் காயப்படுத்தும் நோக்கில் இதனைச் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.