UAE Tamil Web

புதிதாக சேரும் மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% வரை தள்ளுபடி.! அபுதாபி பள்ளி வெளியிட்ட அறிவிப்பு

repton

தலைநகர் அபுதாபியில் உள்ள பள்ளி ஒன்று தனது புதிய மாணவர்களுக்கு 50% வரை கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ரெப்டன் அபுதாபி(Repton Abu Dhabi) பள்ளியே தங்கள் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களுக்கு இந்த கட்டண சலுகையை வழங்க உள்ளதாக கூறியுள்ளது. 50 சதவீதம் வரையிலான இந்த கட்டண தள்ளுபடியானது, குழந்தைகள் பள்ளியில் சேரும் முதல் பருவத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், அதன் பிறகு சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் ஆண்டு( FS1) முதல் 13-ம் ஆண்டு வரையில் தங்கள் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களுக்கு இந்த கட்டண சலுகை வழங்கப்படும் என்று, ரெப்டன் கூறியுள்ளது. மேலும் இந்த புதிய முயற்சியின் கீழ், பள்ளி ஒரு AI (artificial intelligence-செயற்கை நுண்ணறிவு) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிகழ்நேர தள்ளுபடியைக் கணக்கிட, பகுப்பாய்வு அடிப்படையிலான அணுகுமுறையை உள்ளடக்கியது.

இது பெற்றோருக்கு தனிப்பயனாக்கப்பட்ட தள்ளுபடியை(customised discounts) வழங்க ஒரு வழிமுறையைப் பயன்படுத்தும். இது பற்றி கூறிய ரெப்டன் பேமிலி ஆஃப் ஸ்கூல்ஸின் தலைமை இயக்க அதிகாரி மரியன் ஹென்ரியட், பெற்றோர்களுக்கு உகந்த மதிப்பை வழங்குவதற்கான புதுமையான வழிகளை நாங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் பெற்றோர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சிறப்பு தள்ளுபடியை வழங்க உள்ளோம் என்றார்.

அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதால் ரெப்டன் புகழ்பெற்றது என்றும் குறிப்பிட்டார். ரெப்டன் அபுதாபியில் பள்ளி கட்டணம் 2 ஆம் ஆண்டிற்கு 61,000 திர்ஹம்ஸ் முதல் 13-ம் ஆண்டில் 77,000 திர்ஹம்ஸ் வரை இருக்கும். மேலும் இக்கல்வி நிறுவனம் IGCSE மற்றும் A-level பாடத்திட்டம் என இரண்டையும் வழங்குகிறது.

 

repton
0 Shares
Share via
Copy link