UAE Tamil Web

அரபு மொழியை ஈஸியாகவும், வேடிக்கையாகவும் கற்று கொள்ள வந்து விட்டது புதிய ஆப்.!

arabee.pg

வளைகுடா நாடுகளில்  வேலைவாய்ப்பை எதிர்நோக்கி வரும் வெளிநாட்டவர்களுக்கு, அரபு மொழி தெரிந்திருந்தால் கூடுதல் நன்மையே. அரசு துறைகள் சார்ந்த வேலைகளில் பணிபுரிய நேரும் போது அரபு மொழி தெரிந்திருப்பின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisment -

இதனிடையே வளைகுடாவில் வசிக்கும் உங்களுக்கு அரபு மொழி எளிதாக கற்று கொள்ள விருப்பமா.? இதற்கென்றே தற்போது ஒரு ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிலும், பள்ளியிலும் உள்ள அனைவரும் அரபு மொழியை வேடிக்கையாகவும்,எளிதாகவும் கற்றுக்கொள்வதே இதன் நோக்கம் ஆகும். இந்த ஆப் பள்ளிகளிலும் வீட்டிலும் அரபு கற்பிக்கப்படும் முறையை மாற்றுகிறது.

அரபு மொழியை பேச தெரியாதவர்கள் அம்மொழியை கற்று கொள்ள அரபீ(arabee) எனப்படும் புதுமை மொழித் திட்டம் அல்லது ஆப் சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஆப் பற்றி கூறியுள்ள அதன் டெவலப்பர்கள், இது சர்வதேச மொழித் தரங்களுடன்(மொழிகளுக்கான பொதுவான ஐரோப்பிய கட்டமைப்பு குறிப்பு) இணைந்த ஒரு ஊடாடும்(interactive), ஹைபிரிட் மற்றும் டிஜிட்டல் தளமாகும். இது முற்போக்கான, விரிவான கற்றலை செயல்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

இந்த ஆப்பில் உள்ள அம்சங்களை எளிதாக பயன்படுத்தலாம். மேலும் பெரியவர்களின் மேற்பார்வையின்றி இதனை குழந்தைகள் கூட எளிதாக பயன்படுத்தி விளையாடலாம் கூடவே அரபு மொழியை கற்று கொள்ளலாம். arabee ஆப் வேடிக்கையான வீடியோக்கள், சிங்காலாங் பாடல்கள், இன்டராக்ட்டிவ் கேம்கள் மற்றும் டிஜிட்டல் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

arabee1

arabee App-ன் நிறுவனரான லென்கா பாஸ்வீடன் குறிப்பிடுகையில், குழந்தைகள் வேடிக்கையாகவும், ஈடுபாட்டுடனும் அரபு மொழியை கற்று கொள்ள விரும்பிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இந்த App-ஐ உருவாக்கியுள்ளனர். அரபி மொழியைக் கற்க பல குழந்தைகள் சிரமப்படுவதை நாங்கள் கண்டறிந்தோம். அவ்வாறான குழந்தைகளின் பெற்றோருக்கு இது மிகவும் பொருத்தமான ஆப் ஆகும். அரபு மொழி நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதி. பிராந்தியத்தின் மொழியைக் கற்கவும் ரசிக்கவும் அனைத்து தரப்பு மக்களையும் ஊக்குவிப்பதை இலக்காக வைத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் தங்களின் ஆராய்ச்சி அடிப்படையில், ‘ பெரும்பாலான பள்ளி மாணவர்கள் அரபு பாடங்களை நன்கு உள்வாங்கி கொண்டு படிப்பதில்லை. பிற நவீன வெளிநாட்டு மொழிகளைப் போலல்லாமல், பல ஆண்டுகளாக அரபு மொழியை படித்த பின்னும் கூட, பல குழந்தைகளால் அரபியில் பேசி தொடர்பு கொள்ள முடியவில்லை’என்பதையும் இங்கே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

arabee2

ஆசிரியர்கள் தங்களது மதிப்புமிக்க நேரத்தை திட்டமிட்டு மொழியை பயிற்றுவித்தாலும் கூட, கற்பிப்பதற்காக குறைந்த நேரத்தையே கொண்டுள்ளனர். மேலும் தங்களால் அரபி மொழியை புரிந்து கொள்ள முடியாததால் பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கு உதவ முடியாத நிலையும் உள்ளது. மேற்கண்ட காரணங்களால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் ஒரு குறிப்பிடத்தக்க விரக்தியின் ஒரு பகுதியாக அரபியை தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளனர். அதே போல அரபு கற்பித்தலில் பயன்படுத்தப்படும் மூலபொருட்கள் குழந்தைகளை ஈடுபாட்டுடனும். ஆர்வத்துடனும் வைத்திருக்க போதுமானதாக இல்லை என்றும் பாஸ்வீடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில் வீடுகளிலேயும், பயணங்களின் போதும் குழந்தைகள் எளிதாகவும், வேடிக்கையாகவும் அரபி மொழியை கற்க, arabee app-ஐ, அண்ட்ராய்டு (கூகுள் பிளே) மற்றும் ஐஓஎஸ் (ஆப்பிள்) ஆகியவற்றில் டவுன்லோட்செய்து கொள்ளலாம். இந்த ஆப் பயன்படுத்தி குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களாகிய நாமும் கூட அரபு மொழியை தற்போது எளிதாக அடிப்படையிலிருந்து கற்று கொள்ளலாம்.