கொரோனா பேரிடருக்கு மத்தியில் அமீரக பள்ளிகள் நேரடி வளாக கற்றல் மற்றும் தொலைதூர கற்றல் உள்ளிட்ட முறைகளில் மாணவர்களுக்கு தடையின்றி கற்பிக்கும் பணியை செய்து வருகின்றன.
இந்நிலையில் வரும் நவம்பர் 22-ஆம் தேதி முதல் முதல் பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று அமீரக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான பருவத்தேர்வுகள் நவம்பர் 22-ஆம் தேதி தொடங்கும் என்று அமீரக கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
12-ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தொலைதூர முறையில் அதாவது ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல் பருவத்தேர்வுகள் நவம்பர் 15-ல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
“وزارة التربية”: 22 نوفمبر الجاري موعد انطلاق امتحانات الفصل الدراسي الأول ولجميع المراحل الدراسية (المدارس الحكومية، والخاصة التي تتبع منهاج الوزارة).. وستعقد الامتحانات عن بعد ولجميع الصفوف، باستثناء طلبة الصف 12 حيث من المزمع أن تكون في المدارس.#وام pic.twitter.com/nYHcwhwKSs
— وكالة أنباء الإمارات (@wamnews) November 12, 2020
மேற்கண்ட தேதிக்கு பதிலாக நவம்பர் 22-ஆம் தேதி தேர்வுகளை நடத்துவதற்கான கல்வி அமைச்சகத்தின் இந்த புதிய முடிவு, தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த தேவையான செயல்முறைகளுக்கு பள்ளிகள் தயாராக கூடுதல் நேரம் அளிக்கிறது.