UAE Tamil Web

ஷார்ஜா: பள்ளிகளில் மாணவர்களுக்கு குவாலிட்டியான உணவு வழங்கும் உயர் தரங்கள் உள்ளதா.? ஆய்வில் வெளியான முடிவு..

food

ஷார்ஜாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் உடற்பயிற்சிகள் மற்றும் உடல் செயல்பாடுகள் மேற்கொள்வதற்கு பசுமை இடங்களையும்(green spaces), மாணவர்களுக்கு தரமான உணவை வழங்க உயர் தரங்களையும் பெற்றுள்ளன என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

- Advertisment -

மாணவர்களுக்கு பள்ளிகளின் சூழல்கள் எவ்வளவு ஆரோக்கியமானவையாக இருக்கின்றன என்பது குறித்து ஷார்ஜா சுகாதார மேம்பாட்டுத் துறை(HPD) ஆய்வு நடத்தியது. இதன் முடிவுகள் புதுப்பிக்கப்பட்ட ஆரோக்கியமான பள்ளிகள் திட்ட தரங்களை செயல்படுத்துவதற்கு முன்னதாக வெளியிடப்பட்டன.

ஷார்ஜாவிலுள்ள 70% தனியார் பள்ளிகளிலும், 58% அரசுப் பள்ளிகளிலும் உடல் செயல்பாடுகளுக்கு ஏற்ற பசுமை உடற்பயிற்சி இடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 100% அரசுப் பள்ளிகளும், 86% தனியார் பள்ளிகளும் ஆரோக்கிய உணவு விநியோகக் கொள்கையை கொண்டுள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் முறையே 86% மற்றும் 90.5% தனியார் மற்றும் பொதுப் பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில் நடைமுறையில் உள்ளன. அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் பொது நர்சரிகளில் பள்ளிகளுக்குள்ளும், 97% அரசு பள்ளிகளுக்குள்ளும் கிளினிக் உள்ளது. 100% தனியார் பள்ளிகளில் முதலுதவி பயிற்சி பெற்ற ஊழியர்கள் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் 94 சதவீதம் பேர் உள்ளனர்.

தனியார் பள்ளிகளில் 71% மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கூட்டு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை பொது பள்ளிகளில் 62 சதவீதமாக உள்ளது. ஆய்வு முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள HPD இயக்குனர் இமான் ரஷீத் சைஃப், ஆரோக்கியமான பள்ளிகள் திட்டத்தின் புதிய தரங்களை செயல்படுத்த பங்களிக்கும் துல்லிய முடிவுகளை இந்த ஆய்வு உள்ளடக்கியுள்ளது என்றார்.