UAE Tamil Web

அபுதாபி: ரமலானை முன்னிட்டு பள்ளி இயங்கும் நேரம் 4 மணிநேரமாக குறைப்பு..!

Dubai schools

ரமலான் மாதம் முழுவதும் அபுதாபியில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்கும் நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அபுதாபி கல்வி மற்றும் அறிவுத்துறை (ADEK) பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின்படி, காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரையில் மட்டுமே பள்ளிகள் இயங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதிவரையில் பள்ளிகளுக்கு வசந்தகால விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 11 முதல் (ஞாயிற்றுக்கிழமை) இந்த புதுப்பிக்கப்பட்ட கால அளவுகளில் பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11 முதல் ஈத் அல் பித்ர் வரையில் இதே கால அளவில் பள்ளிகள் இயங்க இருக்கின்றன. பிறை தெரிவதைப் பொறுத்து ஏப்ரல் 12 அல்லது 13 ஆம் தேதியில் ரமலான் கொண்டாடப்படும்.

பள்ளிகள் தங்களது 3வது செமஸ்டரில் ஆன்லைன் மற்றும் வகுப்பறைக் கல்வி என இரு வகைகளிலும் (ஹைப்ரிட்) பாடங்களைக் கற்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய அபுதாபி இந்தியன் பள்ளியின் முதல்வர் நீரஜ் பார்கவா, பள்ளிகள் காலை 10.30 மணிமுதல் 3.30 மணிவரையில் திறந்திருக்கும். இருப்பினும் வகுப்புகள் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரையில் மட்டுமே செயல்படும் என்றார்.

மாணவர்கள் ஹைப்ரிட் வகை கற்றலில் இருந்து முழுவதும் ஆன்லைன் வகுப்பிற்கோ அல்லது ரமலான் மாதத்தில் மட்டும் ஆன்லைன் வகுப்பு மூலமாகவோ கற்க பெற்றோர் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என பள்ளிகள் தெரிவித்துள்ளன.

கற்றல் முறையில் மாற்றம் கோரும் பெற்றோர் ஆசிரியர்களைத் தொடர்புகொள்ளலாம் அல்லது பள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dubai schools
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap