துபாயில் நடைபெற இருக்கும் அலெக்சாண்டர் பாபுவின் மியூசிக்கல் ஸ்டான்ட்-அப் காமெடி நிகழ்ச்சி.!

மியூசிக்கல் ஸ்டான்ட்-அப் காமெடியில் தனக்கென தனி முத்திரை பதித்து வளம் வந்துகொண்டிருப்பவர் அலெக்சாண்டர் பாபு. இசை மற்றும் காமெடி கலந்து மியூசிக்கல் ஸ்டான்ட் அப் காமெடியாக வழங்குவது இவரது ஸ்டைல்.

அலெக்சாண்டர் பாபு பல்வேறு மியூசிக்கல் ஸ்டான்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளை பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த “Alex in Wonderland” என்ற ஒரு நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அலெக்சாண்டர் பாபுவின் மியூசிக்கல் ஸ்டான்ட்-அப் காமெடி நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் துபாயில் நடைபெற இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விவரங்கள்:

  • நடைபெறும் இடம்: துபாய் சோபா ஹார்ட்லேண்டில் உள்ள ஹார்ட்லேண்டு இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆடிட்டோரியம் (Hartland International School Auditorium is in Sobha Hardland, Dubai)
  • நடைபெறும் நாள்: ஏப்ரல் 3, 2020
  • நிகழ்ச்சி துவங்கும் நேரம்: இரவு 7.30
  • நிகழ்ச்சி எவ்வளவு நேரம் நடைபெறும்: 2 மணிநேரம்.
  • டிக்கெட் விலை: 75 திர்ஹம்ஸ், 100 திர்ஹம்ஸ், 135 திர்ஹம்ஸ் மற்றும் 175 திர்ஹம்ஸ் போன்ற விலையில் உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலம் வாங்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

> https://ae.bookmyshow.com/events/alex-live-musical-stand-up-comedy-show/ET00006075

Loading...