பொங்கல் வந்துவிட்டது. புத்தாடை, பொங்கல், கரும்பு என களைகட்டும் நாளில் தாயகத்தில் இல்லாமல் போய்விட்டது அமீரகத்தில் வசிக்கும் பலருக்கும் சற்றே கலக்கத்தை அளிக்காமல் இருப்பதில்லை. ஆனால், இப்போது நீங்கள் அமீரகத்திலேயே பொங்கலை தமிழக மக்களுடன் கொண்டாட முடியும். அதற்கான ஏற்பாட்டைத்தான் புஜைரா தமிழ்ச் சங்கம் எடுத்திருக்கிறது.
ஸீரோ க்ராஸரி (Zero Grocery), 89.4 தமிழ் FM மற்றும் மாஸ் ஈவெண்ட்ஸ் & எக்ஸிபிஷன் (Maas Events & Exhibitions) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புஜைரா தமிழ் சங்கம் இத்தகைய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
எங்கே? எப்போது?
புஜைராவின் மதாப் ஸ்ப்ரிங் பார்க்கில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் வைக்கும் பண்டிகை நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அன்றைய தினமே பாரம்பரிய தமிழக விளையாட்டுகளும் நடைபெற இருக்கின்றன.
இந்தப் பண்டிகையில் பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
தமிழ் சங்கம் சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை,
- 5 குடும்பங்கள் சேர்ந்து ஒரு குழுவாக பொங்கல் வைக்க அனுமதி வழங்கப்படும்.
- முதலில் பதிவு செய்யும் 50 குடும்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- அமீரக அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படும்.
- அனைவரும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைளைப் பின்பற்றவேண்டும்.
இந்த விழாவில் பங்கேற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும்,
2 கிலோ பச்சரிசி, 2 கிலோ வெல்லம், 2 கரும்பு, 1 சீப்பு வாழைப்பழம், முந்திரி, ஏலக்காய், திராட்சை, பருப்பு, தேவையான காய்கறிகள் மற்றும் வாழை இலை இலவசமாக வழங்கப்படும்.
இவற்றை இலவசமாக வழங்குவோர்: ஸீரோ க்ராஸரி (Zero Grocery)
பொங்கல்
15 ஆம் தேதி, காலை 10 மணி முதல் 12 மணிவரையில் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும். அதன்பின்னர் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிவரையில் தமிழக பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெறும் என புஜைரா தமிழ்சங்கம் அறிவித்துள்ளது.
பதிவு செய்தல்
இந்தப் பொங்கல் திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் http://bit.ly/ftspongal இந்த இணைய முகவரிக்குச் சென்று பதிவு செய்துகொள்ளுங்கள்.
பதிவு செய்வதற்கான கடைசி நாள்: 12/01/2021