துபாயில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு COVID-19 தொற்று..!

COVID-19 Confirmed cases in Tamil Nadu
COVID-19 Confirmed cases in Tamil Nadu

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் COVID-19 வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு COVID-19 தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தமிழக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நபருடன் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 27 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Loading...