சென்னை விமான நிலையத்தில் துபாய் பயணிகளிடம் சோதனை மற்றும் பறிமுதல்!

துபாயில் இருந்து சென்னை (நவ.,10) வந்த விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமீர் (41), ஆரூன் (29) ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களை தனி அறையில் அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவர்கள் ரூ.71.5 லட்சம் மதிப்புள்ள 1.82 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களைக் கைது செய்தனர்.

இதேபோல் துபாயில் இருந்து மற்றொரு விமானத்தில் சென்னை வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது (22) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர் ரூ.63.6 லட்சம் மதிப்புள்ள 26.5 கிலோ குங்குமப்பூ மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. குங்குமப்பூவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர்.

Source : தமிழக ஊடகங்கள்

Loading...