சென்னை விமான நிலையத்தில் அமீரக பயணிகளிடம் சோதனை; தங்கக் கட்டி பறிமுதல்..!

ஏர் அரேபியன் விமானம், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்தது.

இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, தஞ்சையை சேர்ந்த அர்ஷத் அகமது (26) என்பவர் தனது உள்ளாடையில் 344 கிராம் தங்கக் கட்டியை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

அதன் மதிப்பு ₹11.56 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் ₹1.26 கோடி மதிப்புடைய 3.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Loading...