அமீரக ஷார்ஜா பயணிகளிடம் சோதனை – தங்கம் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் அமீரக ஷார்ஜா பயணிகளிடம் நடத்திய சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஷார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய கேரள மாநிலம் மலபுரத்தைச் சேர்ந்த முகமது இஸ்ரத், முமது முஸ்தபா, முகமது யூனுஸ் ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனை அடுத்து அவர்களிடம் சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 810 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான நான்கு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...