உள்நாட்டு உற்பத்தி குறைவின் காரணமாக துபாய் உதவியை நாடும் இந்தியா..!

அமீரக துபாயில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய நாட்டில் வெங்காய உற்பத்தி குறைந்துள்ள நிலையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது கிலோ ரூ.100 வரையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக குடும்ப தலைவிகள் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், விலையை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை தனியார் மூலம் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக இந்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார்.

கூடுதலாக துபாய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை கணிசமாக இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source: Daily thanthi