UAE Tamil Web

துபாய்: அரசு வேலை வேண்டுமா? அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

STOCK-FAKE-JOBS-

துபாய் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (Dubai Careers website) பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, என்னவேலை? என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் கீழே காண்போம்.

அமீரக நாட்டினர் மட்டுமன்றி, பிற நாட்டினரும் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ட் டைம் மற்றும் முழுநேர பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளில்லா வான்வெளி வாகன நிபுணர் (Unmanned aerial vehicle system specialist)

நிறுவனம்: துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (Dubai Civil Aviation Authority)

தகுதிகள்: எலெக்ட்ரானிக்ஸ் அல்லது டெலிகம்யூனிகேஷன் மற்றும் அதற்கு சமமான இளங்கலைப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அராபிக் மற்றும் ஆங்கிலத்தில் புலமை இருத்தல் வேண்டும்.

ஆளில்லா வான்வெளி வாகன அதிகாரி (Unmanned aerial vehicle system officer)

நிறுவனம்: துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (Dubai Civil Aviation Authority)

தகுதிகள்: கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இளங்கலை முடித்திருக்கவேண்டும் அல்லது அதற்கு சமமான டேட்டா மைனிங், நெட்வொர்கிங், ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் பிரிவில் சான்றிதழைக் கொண்டிருக்கவேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். அராபிக் மற்றும் ஆங்கிலத்தில் புலமை இருத்தல் வேண்டும்.

ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர் (Air traffic controller)

நிறுவனம் : துபாய் ஏர் நேவிகேஷன் சர்வீசஸ் (Dubai Air Navigation Services)

தகுதிகள்: ATC உரிமம், அதற்கு சமமான ICAO படிப்பை முடித்திருக்கவேண்டும். பணி குறித்த பயிற்சி, ஆங்கிலப் புலமையில் நான்காம் நிலை தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பணிக்கு ஏற்ற மருத்துவ தகுதி சான்றிதழ் அவசியம்.

ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர் – அப்ரோச் ( Air traffic controller – approach)

நிறுவனம் : துபாய் ஏர் நேவிகேஷன் சர்வீசஸ் (Dubai Air Navigation Services)

தகுதிகள்: ATC உரிமம், அதற்கு சமமான ICAO படிப்பை முடித்திருக்கவேண்டும். பணி குறித்த பயிற்சி, ஆங்கிலப் புலமையில் நான்காம் நிலை தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பணிக்கு ஏற்ற மருத்துவ தகுதி சான்றிதழ் அவசியம். சர்வதேச விமான நிலையத்தில் 4 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.