UAE Tamil Web

அமீரக வேலைவாய்ப்பு : சேல்ஸ் ஆபிசர் வேலை – 5000 திர்ஹம்ஸ் சம்பளம் – விபரங்கள் உள்ளே..!

interviewgetty

அமீரகத்தின் பிரபல வங்கிகளில் காலியாக உள்ள கிரெடிட்கார்டு சேல்ஸ் ஆபிசர் பணிக்கான நேர்முகத்தேர்வு அடுத்தவாரம் நடைபெற இருக்கிறது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு 5000 திர்ஹம்ஸ் ஊதியம் மற்றும் இன்செண்டிவ்ஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளி டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவராக இருத்தல் வேண்டும்.

சிறந்த தகவல் தொடர்புத் திறன் மற்றும் தனிப்பட்ட ஆளுமைகள் நிறைந்தவராக இருத்தல் அவசியம். அமீரக வங்கிகளில் கிரெடிட் கார்டு சேல்ஸ், லோன், இன்சுரன்ஸ் மற்றும் பிற பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

தங்களது சொந்த நாட்டில் இதே அனுபவத்தைப் பெற்றவர்களும் இந்த நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் 14 – 18 தேதிகளில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரையில் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்

அலுவலக எண். 302,

அல் மசாவூத் டவர் 2,

போர்ட் சயீத்,

தேரா,

துபாய்.

interviewgetty
8 Shares
Share via
Copy link