UAE Tamil Web

கனடாவில் ஹோட்டலில் பணிபுரிய ஆட்கள் தேவை – துபாயில் நடைபெறும் நேர்முகத்தேர்வு..!

hospitality-employee-qualities

உணவு மற்றும் பானங்கள் (food and beverages – F&B) பிரிவில் அனுபவம் உள்ளவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு கனடாவில் வேலை காத்திருக்கிறது.

ஃபாஸ்ட்புட் தயாரிப்பு நிறுவனங்களான டிம் ஹார்டான்ஸ் (Tim Hortons), வெண்டிஸ் (Wendy’s) மற்றும் துபாயில் உள்ள பர்கர் கிங் (Burger King) ஆகியவற்றில் காலியாக உள்ள மேனேஜர் மற்றும் சூப்பர்வைசர் ஆகிய பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வை துபாயில் உள்ள டிஎம் இமிகிரேஷன் கன்சல்டண்ட்ஸ் (DM Immigration Consultants) நடத்த இருக்கிறது.

தேர்வு செய்யப்படுபவர்கள் கனடாவிற்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு நிகழ்வு மற்றும் செமினார் ஷேக் சயீத் சாலையில் உள்ள மில்லினியம் பிளாஸா ஹோட்டலில் ஜூலை 11 ஆம் தேதி மாலை 5 – 7 மணிவரையில் நடைபெற உள்ளது.

மற்றொரு செமினார் ஜூலை 12 ஆம் தேதி அபுதாபியின் அல் சலாம் தெருவில் உள்ள சலாம் HQ கட்டிடத்தில் நடைபெற இருக்கிறது.

நேர்முகத்தேர்விற்கு வருவோர், ரெஸ்டாரன்ட்களில் குறைந்தபட்சம் 1 ஆண்டு மேனேஜர் அல்லது சூப்பர்வைசராக பணிபுரிந்திருக்கவேண்டும்.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” எங்களுடம் இணைந்து இயங்கும் டிஎம் கன்சல்டண்ட்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் நேர்முகத்தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. இதில் பங்குபெற முன்பதிவு அவசியம். எங்களுடைய அதிகாரியான விக்ராந்த் அவர்களை 050-7341456 என்ற எண்ணிற்கு அழைத்தோ அல்லது vikrant@dm-consultant.com என்ற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பியோ உங்களது வருகையை உறுதிபடுத்திக்கொள்ளவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

hospitality-employee-qualities
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap