UAE Tamil Web

அபுதாபி காவல்துறையில் பணியாற்ற விருப்பமா? அனைத்து நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்..!

Abudhabi Police

மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (EMT) ஆகிய பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவிருப்பதாக அபுதாபி காவல்துறை தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் ஏமிராட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் காவல்துறையின் அறிவிப்பில் சுட்டப்பட்டுள்ளது.

- Advertisment -

இளங்கலை முடித்திருக்கவேண்டும், நேஷனல் சர்வீஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும் – ஏமிராட்டிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். நடத்தப்படும் பல்வேறு மருத்துவ சோதனைகளில் தேர்ச்சி பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் குற்றவழக்குகளில் பின்னணி உடையவராக இருத்தல் கூடாது மற்றும் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்புகளில் உறுப்பினராகவும் இருத்தல் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக இரண்டு வருட மருத்துவ சேவையில் பணியாற்றியவராக இருத்தல் வேண்டும். கூடுதலாக ஏர் ஆம்புலன்ஸில் பணிபுரிந்த அனுபத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அதோடு, கீழ்க்கண்ட படிப்புகளை முடித்திருத்தல் வேண்டும்.

  • அட்வான்ஸ்ட் டிராமா லைஃப் சப்போர்ட் (Advanced trauma life support – ATLS).
  • அட்வான்ஸ்ட் கார்டியாவாஸ்குலர் லைஃப் சப்போர்ட் (Advanced cardiovascular life support – ACLS).
  • பீடியாட்ரிக் அட்வான்ஸ்ட் லைஃப் சப்போர்ட் (Pediatric advanced life support – PALS).
  • அட்வான்ட்ஸ்ட் ஏர்வே மேனேஜ்மென்ட் (Advanced airway management – AAM).

விண்ணப்பதாரர்கள் அபுதாபி சுகாதாரத் துறையிடம் மருத்துவப் பயிற்சிக்கான உரிமத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அபுதாபி, அல் அய்ன், அல் தஃப்ரா மற்றும் அல் ருவைஸ் ஆகிய இடங்களில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுவதாக அபுதாபி காவல்துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.