34.7 C
Dubai
October 22, 2020
UAE Tamil Web

அபுதாபி: சுகாதார காப்பீட்டு மீறல்களுக்கான புதிய அபராத பட்டியல் வெளியீடு..

insurance

சுகாதார காப்பீட்டு பாலிசி மீறல்களுக்கான புதிய அபராதங்களை அபுதாபி அறிவித்துள்ளது. இதில் ஊழியர்களின் அவசர சுகாதார செலவினங்களை ஈடுகட்ட தவறும் நிர்வாகத்திற்கான அபராதமும் அடங்கும்.

அபுதாபி சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 43 மீறல்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் பட்டியலிடப்பட்டுள்ள பாலிசி மீறல்களுக்கு 100 திர்ஹம்ஸ் முதல் 20,000 திர்ஹம்ஸ் வரை அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய விதிகளின் படி, ஊழியர்கள் நிறுவனத்தின் சுகாதார காப்பீட்டின் கீழ் இருக்கும் போது, அவர்களுக்கு ஏற்படும் அவசரகால நிகழ்வுகளுக்கான சுகாதார சேவைகள் அல்லது மருத்துவ சேவைகளின் செலவை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்க மறுத்தால் 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு செல்லுபடியாகும் சுகாதார காப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனது காப்பீட்டைப் பயன்படுத்த மற்றொரு நபரை அனுமதிப்பவர்களுக்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமோ அல்லது மூன்றாம் தரப்போ(third party administrator) சுகாதார சேவைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தவறினாலோ அல்லது தாமதித்தாலோ, அவற்றிற்கு அதிகபட்ச அபராத தொகையான 20,000 திர்ஹம்ஸ் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரின் உரிமைகளை பாதுகாக்கவும், அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் தொடர்ச்சியான சுகாதார சேவையை வழங்குவதற்கும் அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் தான் இந்த புதிய அபாரதங்கள் என அபுதாபி ஊடக அலுவலகம் கூறியுள்ளது.



error: Alert: Content is protected !!