அபுதாபி: பொதுமக்கள் அனைவரும் அமீரக பணத்தை சட்டம் காட்டியுள்ள வழிமுறைகளின் அடிப்படையில் மதித்து நடக்கவேண்டும் என அமீரக பொது வழக்குத்துறை அறிவித்துள்ளது.
அமீரக பணத்தில் நாட்டின் பெயர் மற்றும் சின்னமும் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பணத்தின் மதிப்பை விட அதன் நன்மதிப்பு அதிகமாகிறது. அமீரக பணத்தை அவமதிப்பது அமீரக சட்டதிட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என பொது வழக்குத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பொது வழக்குத் துறையின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், பொதுவில் அமீரக பணத்தை வேண்டுமென்றே சிதைத்தாலும், அழித்தாலும் அல்லது கிழித்தாலும் 1000 திர்ஹம்ஸ்க்கு அதிகமாகவோ அல்லது சிதைக்கப்பட்ட பணத்தின் மதிப்பிற்கு பத்து மடங்கிலோ அபராதமானது விதிக்கப்படும் என அமீரக பணத்தை அழித்தல், கிழித்தல் ஆகியவற்றிற்கான 2018 மத்திய வங்கி, நிதி நிறுவன மற்றும் நடவடிக்கைகளுக்கான ஆர்டிகிள் 114 ல் இடம்பெற்றுள்ள சட்ட விதி எண் (14) தெரிவிக்கிறது.
மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கணக்கின் மூலமாக பதிவேற்றும் விஷயங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றிற்கு தாங்களே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
UAE Public Prosecution calls on public not to misuse national currency
Public Prosecution calls on social media users to have a sense of responsibility towards what they publish online
https://t.co/FJ51E4nA41 pic.twitter.com/SZeVrfDOIP— النيابة العامة (@UAE_PP) June 13, 2020
“அமீரக பணத்தில் இடம்பெற்றுள்ள நாட்டின் சின்னம் மற்றும் பொது நெறிகளுக்கு குந்தகம் விளைவிப்பது அமீரக சட்டத்தின் அடிப்படையில் தண்டைனைக்குரிய குற்றமாகும். பெடரல் தண்டனைச்சட்டம் ஆர்டிகிள் 176 (bis) ன் படி, நாட்டின் மற்றும் அதன் நிறுவனங்களின் சட்டம் மற்றும் கவுரவம், கொடி, சின்னம் ஆகியவற்றிற்கு சேதம் விளைவித்தாலோ, நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், மற்றும் கேலி செய்தாலோ குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 500,000 திர்ஹம்ஸ்க்கு குறைவில்லாமல் அபராதமும் விதிக்கப்படும்” என பொது வழக்குத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
2015 இணைய குற்றங்களுக்கு எதிரான ஆர்டிகிள் 29 ல் குறிப்பிடப்பட்டுள்ள, பெடரல் தண்டனைச் சட்டம் (5) ன் படி மேற்கூறிய குற்றம் சார்ந்த பதிவுகளை இணைய வெளியிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பதிவேற்றினால் சம்பத்தப்படுத்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என பொது வழக்குத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த ஆர்டிகிளில் குறிப்பிட்டுள்ளபடி, தேசத்தின் நிறுவனத்தின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஆட்சியாளர்கள், பட்டத்திற்குரிய இளவரசர்கள், துணை ஆட்சியாளர்கள், தேசிய கொடி, நாட்டின் அமைதி, நாட்டின் சின்னங்கள், தேசிய கீதம் ஆகியவை பற்றி கேலி செய்யும் வகையிலோ, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ, தேசத்தின் சட்டம் மற்றும் கவுரவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ செயல்பட்டால் தற்காலிக சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு, ஒரு மில்லியன் திர்ஹம்ஸ்க்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படும்.
அமீரக பணத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக வெளியிடப்பட்ட வீடியோக்கள் அமீரக பொது வழக்குத்துறையின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதன் விளைவாகவே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அமீரக பணத்தை அவமதிக்கும் அந்த வீடியோக்கள் மீதான பல புகார்கள் My Safe Society மூலமாக பொது வழக்குத்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமீரக பணத்தை சரிவர கையாளாத ஒருவரது செயல்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. தேசிய சின்னம் இடம்பெற்றுள்ள பணத்தினை தவறாக பயன்படுத்தவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.