வெள்ளிக்கிழமை மாலை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கார்டன்ஸில் நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் (என்எம்ஏசிசி) பிரமாண்ட திறப்பு விழாவிற்கு இந்திய மற்றும் சர்வதேச கலை மற்றும் பொழுதுபோக்கு துறையில் சிறந்து விளங்கும் முன்னணி நாயகிகள் மற்றும் நாயகர்கள் ஒன்று திரண்டனர்.
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் (இந்த நிகழ்விற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து பறந்து வந்தனர்), ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா உட்பட இந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் அத்வானி சைஃப் அலி கான் கரீனா கபூர் கான் ரஜினிகாந்த் சல்மான்கான் மற்றும் அமீர்கான் போன்ற மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இது குறித்து பிரியங்கா மற்றும் நிக் ஆகிய தம்பதி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், ஷாருக்கான் உட்பட்ட பல பிரபலங்களின் குடும்பங்களுடன் அவர்கள் உரையாடல் நிகழ்த்தியதை வெளியிட்டுள்ளனர். அப்பொழுது சல்மான்கான் மும்மரமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பது பொதுவாக உள்ளது மேலும் ஹாலிவுட் சேர்ந்த பல பிரபலங்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.அமெரிக்க சூப்பர்மாடல் ஜிகி ஹடாட் சிவப்பு கம்பள வரவேற்பினை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஹாலிவுட் சேர்ந்த Zendaya, Penelope Cruz மற்றும் Tom Holland ஆகியோரும் பங்கு பெற்றனர்.
சைஃப் மற்றும் கரீனா ஜோடி கரிஷ்மா கபூர் உடன் இருந்தனர், அதே சமயம் ஆலியா பட் தனது தாய் சோனி ரஸ்தான், தந்தை மகேஷ் பட் மற்றும் சகோதரி ஷாஹீன் பட் ஆகியோருடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
விருந்தினர் பட்டியலில் ஐஸ்வர்யா ராய் பச்சன், அவரது மகள் ஆராதயா, வருண் தவான், கிருதி சனோன், வித்யா பாலன், அதியா ஷெட்டி மற்றும் ஜீதேந்திரா மற்றும் நீது கபூர் போன்ற மூத்த நட்சத்திரங்களும் இடம்பெற்று இருந்தனர்.
நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ உலக மையத்தில் அமைந்துள்ளது. இந்த பிரம்மாண்ட அரங்கானது மூன்று வகையான கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தக்கூடிய அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.
கம்பீரமான 2,000 இருக்கைகள் கொண்ட கிராண்ட் தியேட்டர், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட 250 இருக்கைகள் கொண்ட ஸ்டுடியோ தியேட்டர் மற்றும் 125 இருக்கையில் உடன் கட்டப்பட்டுள்ள டைனமிக் கியூப் ஆகியவை அடங்கும்.
இந்த மையத்தில் ஆர்ட் ஹவுஸ் உள்ளது, இது உலகளாவிய அருங்காட்சியகத் தரத்தின்படி கட்டப்பட்ட நான்கு-அடுக்கு காட்சி கலை இடமாகும்.
ஸ்டுடியோ தியேட்டரில் 250 பேர் அமரும் வசதி உள்ளது, இது ஒரு நெகிழ்வான மேடை, ஒரு ஒருங்கிணைந்த டால்பி அட்மாஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், எல்இடி இயக்கப்படும் தியேட்டர் லைட்டிங் சிஸ்டம் மற்றும் பல சிறப்பு அம்சங்களும் உள்ளன.