ஆண்டு விடுமுறை நெருங்கிவிட்டாலே ஊருக்கு வாங்கிச் செல்லவேண்டிய பொருட்களின் பட்டியலை தயார் செய்துவிடுவார்கள் நம்மாட்கள். அந்தப் பட்டியலில் நிச்சயம் கேமரா உள்ளிட்ட டிஜிட்டல் பொருட்கள் தான் கணிசமான வரிசையை ஆக்கிரமித்திருக்கும். நம் அன்புக்குரியவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள் நிகரற்ற தரத்துடனும் நமக்கேற்ற விலையிலும் இருந்திட வேண்டும். இல்லையா?
அப்படியென்றால் நீங்கள் நேஷனல் ஸ்டோர்-க்குத்தான் செல்ல வேண்டும். கேமரா உலகின் ஜாம்பவானான கேனான் (Canon) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அமீரக வினியோகஸ்த நிறுவனமான நேஷனல் ஸ்டோரில் கேமரா முதல் கால்குலேட்டர் வரையில் உங்களுக்குத் தேவையான பொருட்களை தரமாகவும் சரியான விலையிலும் வாங்கலாம்.
இன்று நேற்றல்ல 1970 ஆம் ஆண்டிலிருந்தே நேஷனல் ஸ்டோர், கேனான் நிறுவனத்தின் விநியோகஸ்தராக இருந்து வருகிறது. புதிய பொருட்கள் மட்டுமல்லாது பழுது நீக்குதல், சர்வீஸ் செய்தல் போன்றவற்றையும் இந்நிறுவனத்தின் அனுபவமும் திறமையும் வாய்ந்த பணியாளர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.
இதுவரையில் பல்வேறு அமைப்புகளில் இருந்து 34 விருதுகளை நேஷனல் ஸ்டோர் பெற்றிருக்கிறது. இதுவே, மக்களிடையே நேஷனல் ஸ்டோர் பெற்றிருக்கும் நம்பகத்தன்மைக்கு சாட்சி சொல்லும்.
கேனான் மட்டும்தானா? நிச்சயமாக இல்லை. கேனான் (Canon), சாண்டிஸ்க் (Sandisk), மோசர் (Moser), விகோ (Wiko), ஜிபி பேட்டரீஸ் (GP batteries), வெஸ்டர்ன் டிஜிட்டல் (Western Digital), சென் (Kzen), எக்ஸ்டச் (Xtouch), மற்றும் கிரவுன் லைன் (Crown line) என டிஜிட்டல் உலகின் அசத்தல் கண்காட்சியையே தன்னுள் கொண்டிருக்கிறது நேஷனல் ஸ்டோர். மேற்கண்ட எந்தவொரு நிறுவனத்தின் பொருட்களையும் இங்கே வாங்கிட முடியும்.
என்னென்ன பொருட்கள் வாங்கலாம்?
- கேமராக்கள்
- பிரிண்டர்கள்
- கேம்கார்டர்கள் (Camcorders)
- நகலெடுக்கும் இயந்திரம் (Photocopiers)
- கேமரா உதிரி பாகங்கள்
- கால்குலேட்டர்கள்
- மெமரி கார்டுகள்
- பென்டிரைவ்கள்
- ஹார்ட் டிஸ்க்
- ட்ரிம்மர் உள்ளிட்ட சிகை அலங்காரப் பொருட்கள்
- பவர் பங்குகள்
- செல்போன் உதிரி பாகங்கள்
- வீட்டு மற்றும் சமையலறை உபயோகப் பொருட்கள்
உள்ளிட்ட பொருட்களை தரமாகவும் அதற்குரிய சரியான விலையிலும் நீங்கள் இங்கே வாங்கிட முடியும்.
கேமராக்களைப் பொறுத்தவரையில் DSLR, காம்பேக்ட் ஸ்டில் கேமரா (Compact Still camera) உள்ளிட்ட பல நவீன ரக கேமராக்களை ஒருசேர பார்வையிட்டு அவற்றின் அசாதாரண திறனை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இங்கே உங்களுக்குக் கிட்டும்.
அதேபோல, உங்களுடைய அலுவலகத்திற்குத் தேவையான சிறிய ரக பிரிண்டர்கள், லேசர் பிரிண்டர்கள், வீட்டு உபயோகத்திற்கான பிரிண்டர்கள், தொழில்முறை போட்டோ பிரிண்டர்கள் (Professional Photo Printers) ஆகியவையும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இங்கே உங்களுடைய பழைய கேனான் பொருட்களை சர்வீஸ் செய்ய ஒரு நிபுணர் பட்டாளமே இங்கிருக்கிறது. பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பில் பல வருட அனுபவம் கொண்ட நிபுணர்கள் உங்களுடைய பொருட்களை சர்வீஸ் செய்து புதுப்பொலிவுடன் தருகிறார்கள்.
சரி, அமீரகத்தில் நேஷனல் ஸ்டோர் எங்கே இருக்கிறது? எங்கு இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். ஆம். துபாய், அபுதாபி, ராஸ் அல் கைமா ஆகிய எமிரேட்களில் மொத்தம் 6 ஷோரூம்களை கொண்டிருக்கிறது நேஷனல் ஸ்டோர்.
முகவரிகள்
கேனான் – துபாய் மால் – யூனிட் நம்பர். L2-89, ஏட்ரியம் லெவல் – 2.
தொடர்புக்கு: 043399171
நேஷனல் ஸ்டோர் LLC – காலிதியா மால், 1st Floor – அபுதாபி
தொடர்புக்கு: +971 24912533
அல் நயீம் மால், தரைத்தளம்– பின் தஹேர் தெரு – தஃபான் அல் நக்கேல் – ராஸ் அல் கைமா
தொடர்புக்கு: 072263392
Mezzanine floor, அல் கஸல் கமெர்சியல் காம்ப்ளெக்ஸ், அல் பதா, சத்வா, துபாய்.
தொடர்புக்கு: 043276688.
அல் அய்ன் மால் – முதல் தளம், F113, F113b அல் அய்ன் மால், ஒத்மான் பின் அஃபான் தெரு – சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட், அல் அய்ன்
தொடர்புக்கு : 037530855
சிட்டி செண்டர் மிர்திஃப் : லெவல் 1. Emax க்கு எதிரே – ஷேக் முகமது பின் சயீத் சாலை – மிர்திஃப் – துபாய்.
தொடர்புக்கு : 04-2843312