UAE Tamil Web

அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல… புதுதில்லியில் உள்ள அமீரக தூதரகம் வெளியிட்ட எச்சரிக்கை..!

UAE_Flag_resources

புது தில்லியில் உள்ள அமீரக தூதரகம் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், விசிட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அமீரக தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே நாடவேண்டும் எனவும் பிற சந்தேகத்திற்குரிய இணையதளங்களைப் பயன்படுத்துதல் வேண்டாம் என எச்சரித்துள்ளது.

அச்சத்திற்குரிய இணையதளங்களைப் பயன்படுத்தி அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு @UAEembassyIndia ஒருபோதும் பொறுப்பேற்காது என அமீரக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியா – அமீரகம் இடையே விமானப் போக்குவரத்துத்தடை அமலில் இருந்தபோது, அமீரக தூதரகத்தின் பேரில் போலியான இணையதளத்தினை வடிவமைத்து அப்பாவி மக்களிடயே ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

UAE_Flag_resources
1 Share
Share via
Copy link
Powered by Social Snap