நூதன முறையில் அரபி ஒருவரை மசாஜ் பார்லருக்கு அழைத்து கட்டிப்போட்டு அவரிடம் இருந்து 25,600 திர்ஹம்ஸ் பணத்தை சுருட்டிச் சென்ற 4 பேருக்கு துபாய் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
துபாயில் கார் ஒன்றில் மசாஜ் பார்லர் குறித்த விளம்பரம் ஒன்றை கண்டு குதூகலித்துப் போன அரபி ஒருவர் அதனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் ஓட்டலுக்கு அரபியை மசாஜிற்காக வரவழைத்துள்ளார்.

அரபியும் நம்பிச் சென்றதால் அங்கு காத்திருந்த 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அடங்கிய மோசடி கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. மேலும் அரபியின் கைக்கால்களை கட்டிப்போட்டு அவரது பர்சில் இருந்த 12,000 திர்ஹம்சை கொள்ளையடித்தது. ஏடிஎம் கார்ட் ரகசிய எண்ணை அடித்து வாங்கி அதில் இருந்த 13,600 திர்ஹம்ஸையும் மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. தொடர்ந்து அரபியை நிர்வாணப்படுத்தி பெண்களோடு புகைப்படங்கள் எடுத்துவிட்டு ஆப்பிரிக்க கும்பல் தப்பியோடியது. ஒருவழியாக அங்கிருந்த மீண்ட அரபி, இது குறித்து போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஆப்பிரிக்க கும்பலை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அரபியிடம் இருந்து சுருட்டிய பணத்தை திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டது.
