UAE Tamil Web

பசங்களா நீங்க வேற லெவல் – மாணவர்களுக்கு நன்றி தெரிவித்த அபுதாபி இளவரசர்!

கோடை விடுமுறைக்கு பின்னர் அபுதாபியில் இன்று முதல் பள்ளிக்கூடங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கின. ஆயிரக்கணக்கான மாணவர்கள் முதல் நாளிலேயே ஆர்வத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர். பள்ளியில் நுழையும்போதே கொரோனா நெகடிவ் சான்றிதழ்களை சமர்பித்து உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீப கால கொரோனா நெருக்கடிகளை சமாளித்து பள்ளி செல்ல மாணவர்கள் முனைப்பு காட்டியிருப்பது கல்வி ஒருபோதும் தடைபட்டு நிற்காது எனும் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும் அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் நன்றி பாராட்டியுள்ளார்.

0 Shares
Share via
Copy link