UAE Tamil Web

மம்மூட்டிக்கு கோல்டன் விசா – யூசுஃப் அலி முன்னிலையில் அமீரக அரசு வழங்கிய கவுரவம்!

தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது அமீரகம் அரசு.
இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் இந்த கோல்டன் விசாவை ஏற்கனவே பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் என்பவருக்கும் அண்மையில் இந்த விசா வழங்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல நடிகர் மம்மூட்டிக்கு கோல்டன் விசாவை அமீரக அரசு வழங்கி கவுரவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்மூட்டி, கோல்டன் விசா வழங்கி கவுரவித்த முகமது அலி அல் ஷோராஃபா அல் ஹம்மாதிக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விசா கிடைக்க பெரிதும் உதவியாக இருந்த யூசுஃப் அலிக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மம்மூட்டியுடன் சேர்த்து மலையாள நடிகர் மோகன்லாலுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 Shares
Share via
Copy link