UAE Tamil Web

விசிட் விசா வைத்திருந்தால் இந்தியாவில் இருந்து ஷார்ஜா பயணிக்கலாம் – ஏர் அரேபியா அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. அண்மையில் ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபால் ஆகிய நாடுகளில் இருந்து ரெசிடன்சி, சுற்றுலா, இணையவழி வேலைக்கான ஈ – விசா (Employemt eVisa ) வைத்திருந்தால் நேரடியாக ஷார்ஜாவுக்கு மட்டும் பயணிக்கலாம் என ஏர் அரேபியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேல் கூறப்பட்ட 4 நாடுகளில் இருந்து ஷார்ஜாவுக்குள் நுழைய எந்தவித முன் அனுமதியும் தேவையில்லை எனவும் ஏர் அரேபியா விமான நிறுவனம் கூறியுள்ளது.

59 Shares
Share via
Copy link