UAE Tamil Web

ஷார்ஜா: அரசு நர்சரி பள்ளிகளில் புதிய அட்மிஷன்களுக்கு தடை!

கோடை விடுமுறை முடிந்து அமீரகத்தில் அடுத்த மாதம் முதல் பள்ளிகள் செயல்பட உள்ளன. கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் வருகைக்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு நர்சரி பள்ளிகளில் புதிய அட்மிஷன்களுக்கு ஷார்ஜா கல்வித்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கூட்டத்தை தவிர்க்கவும் குறைந்த அளவிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நர்சரி பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடம் தனி மனித இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link