UAE Tamil Web

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட 1.094 கிலோ தங்கம் பறிமுதல்

துபாய் மற்றும் இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.47.73 லட்சம் மதிப்புடைய  தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்ற பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் பெண் ஒருவர் தங்கம் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சென்னையை சேர்ந்த அப்பெண்ணை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தங்கப்பசையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்பெண்ணை கைது செய்தனர்.

அது போன்று இலங்கையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த அதிகாரிகள், 123 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 Share
Share via
Copy link