தூத்துக்குடி துறைமுகத்தில் சட்டவிரோதமான பல்வேறு பொருட்களை கடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
இதனால் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு காவல்துறை அங்க்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் சரக்கு கப்பலில் வெளிநாட்டு சிகரெட்டு வகைகள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் துபாயிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த சரக்கு கப்பல் மூலம் சரக்கு வகைகள் வந்தது. சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் விசாரித்ததில் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சந்தேகம் எழுந்ததால் அதிகாரிகள் திறந்து சோதனை நடத்தினர். அப்போது பேரீச்சம் பழப் பெட்டிகளும் அதன் பின்புறம் வெளிநாட்டு சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக அதிகாரிகள் சிகரெட் பெட்டிகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.1.20 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.