UAE Tamil Web

கொரோனா காலத்தில் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்குச் சென்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

travelers airport

சமீபத்தில் இந்தியாவின் மாநிலங்களுக்கான வெளியுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் V.முரளீதரன் அமீரகத்திற்கு வருகைபுரிந்தார். அமீரக தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் அமீரக வாழ் இந்தியர்களின் பல நலன்கள் குறித்தும் இருநாட்டு உறவுகள் குறித்தும் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதனையடுத்து துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அமீரக வாழ் இந்தியர்களை சந்தித்தார். அப்போது பல கருத்துக்களை மக்களோடு அவர் பகிர்ந்துகொண்டார்.

கொரோனா சமயத்தின் போது அமீரகத்தில் இருந்து 13 லட்சம் பேர் இந்தியா சென்றதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதேபோல, அவர்களுள் 11 லட்சத்தி 50 ஆயிரம் பேர் மீண்டும் அமீரகம் திரும்பியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“அமீரகத்தில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கும் மீண்டும் அமீரகம் திரும்பியவர்களுக்குமான வித்தியாசம் 1.5 லட்சம் பேராகும். இவர்கள் அனைவரும் வேலையிழந்தவர்கள் எனக் கருத முடியாது. சிலர் வேறு பணிகளில் இணைந்திருக்கலாம் அல்லது விடுமுறைக்காக வந்தவர்களாக இருக்கலாம்” என்றார்.

அதேபோல, இந்தியாவில் சிக்கிக்கொண்ட அமீரக வாழ் இந்தியர்களின் ICA ஒப்புதல் குறித்த சிரமங்களை அமீரக ஆட்சியாளர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், விரைவில் இந்த சிக்கல்கள் களைய முயற்சிகள் எடுக்கப்படும் என அமீரக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அமைச்சர் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

travelers airport
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap