UAE Tamil Web

சற்றுமுன்: அமீரகத்தில் மிதமான நிலநடுக்கம் – மக்கள் பயப்படத் தேவையில்லை என அரசு அறிவிப்பு..!

EARTHQUAKE

அமீரகத்தில் திப்பா அல் புஜைரா பகுதியில் இன்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வுமையத்தின் நில அதிர்வு நெட்வொர்க் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 1.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் மக்கள் இதனால் அச்சங்கொள்ளத் தேவையில்லை எனவும் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் நில அதிர்வு நெட்வொர்க் அறிவித்துள்ளது.

இம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி திப்பா அல் புஜைராவில் இன்று மதியம் 2.47 மணிக்கு நிலநடுக்கமானது நிகழ்ந்திருக்கிறது.

EARTHQUAKE
4 Shares
Share via
Copy link