UAE Tamil Web

ஷார்ஜா வழியாக திருச்சி சென்ற மூவர்.. லேப்டாப் மூலம் நூதன முறையில் கடத்தப்பட்ட 1.3 கோடி மதிப்புள்ள தங்கம் – சுங்கத்துறை வெளியிட்ட வீடியோ!

தமிழகத்தில் உள்ள திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சென்ற மூன்று பயணிகளிடம் இருந்து லேப்டாப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ₹1.3 கோடி மதிப்புள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மூன்று பயணிகளிடம் இருந்து மொத்தம் 1.98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மடிக்கணினியின் விசைப்பலகையின் (Keyboard) கீழ் உள்ள குழிக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த மே 11ம் தேதி ஷார்ஜா வழியாக இந்தியா சென்ற அந்த மூன்று பயணிகளும் திருச்சி சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டனர். தற்போது அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகின்றது. திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு தற்போது கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

துபாய் போன்ற கெடுபிடிகள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இதுபோல தங்கம் கடத்தப்படுவது வாடிக்கையான ஒன்றாக தற்போது மாறியுள்ளது என்று தான கூறவேண்டும். ஆனால் துபாய் மற்றும் தமிழக சுங்கத்துறை இதுபோன்ற செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap