துபாய் முராகாபாத் பகுதியில் சாலையில் செல்வோரிடம் 1 திர்ஹமுக்கு தராசில் எடை சோதித்து பார்த்து கொள்ளலாம் என்று புதுவிதத்தில் பிச்சை எடுத்த நபரை துபாய் போலீசார் கைது செய்தனர்.
பொது குற்றப் புலனாய்வுத் துறையின் ஊடுருவல் தடுப்புப் பிரிவின் செயல் இயக்குநர் கர்னல் அஹ்மத் அல் அதிதி கூறுகையில், முராகாபாத் காவல் நிலையத்தின் ஒத்துழைப்பில், சாலையில் செல்வோரிடம் எடைப் பார்க்க 1 திர்ஹம் கேட்ட பிச்சைக்காரர் கைது செய்யபட்டதாக கூறினார்.
“அதிகாரப்பூர்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் ஏழைகளுக்கு உதவ தயாராக உள்ளனர். பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களைக் கட்டுப்படுத்த சிஐடி குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரமலான் மாதத்தில் தொடங்கப்பட்ட பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகளை துபாய் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது” என்றார் அதிதி.
மேலும் தெரிவித்த அவர், “பிச்சை எடுப்பது நமது சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
மேலும் இது அமீரகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் என்பதால் இந்த விஷயத்தை தீவிரமாக செயபட்டு வருகிறோம். இதனால் இது திருட்டு மற்றும் பிக்பாக்கெட் போன்ற சட்ட விரோத குற்றங்கள் அதிகரிக்கிறது” என்றார்.