அமீரகத்தில் ஆன்லைனில் பிச்சை என்னும் பெயரில் மோசடி சம்பவத்தில் ஈடுவடுவோருக்கு எதிராக குடியிருப்பாளர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அபுதாபி காவல்துறைக்கு அறிவித்துள்ளது.
ஆன்லைன் தளமான மின்னஞ்சல்கள், வாட்ஸ் அப் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பிச்சை எடுப்பது அமீரகத்தில் குற்றச் செயலாகும். இது பொது மக்களை குறிவைத்து, கும்பல்களால் நடத்தப்படும் மோசடி நடவடிக்கையாகும்.
பிச்சைக்காரர்கள் பல்வேறு ஆன்லைன் ஊடகங்கள் மூலம் அனுதாபத்தைத் தூண்டும் வகையில், படங்கள், கதைகள் உருவாக்குதல், அனாதைகள்போல் சித்தரித்தல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் மசூதிகள் கட்டுவது போன்றவற்றுக்கு உதவுவதாக கூறி பணம் வசூலிக்கும் என்ற நோக்கில் மோசடியில் பலர் ஈடுபட்டுவதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
பிச்சை எடுப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் குறித்து புகார் அளிக்குமாறு காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அமீரகத்தில் பிச்சை எடுத்தால் 6 மாத சிறைத் தண்டனை அல்லது 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது ரமலான் வரவிருப்பதால் பிச்சை எடுப்பது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.
மின்னஞ்சல்கள், வாட்ஸ் அப் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் பிச்சை என்னும் பெயரில் மோசடி சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதுகாப்பு சேவையை மையத்திந் எண்ணுக்கு 8002626 (AMAN2626) அல்லது (2828) என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்யலாம். இல்லாவிட்டால் (aman@adpolice.gov) என்ற ஈமெயிலுக்கு புகார் தெரிவிக்கலாம் அல்லது அபுதாபி காவல்துறையின் ஜெனரல் கமாண்டின் ஸ்மார்ட் அப்ளிகேஷனில் புகார் அளிக்கலாம்.