UAE Tamil Web

1.17 நிமிடத்தில் வழக்கினை முடிக்கும் அதிரடி காவல் நிலையம் – விருது வழங்கிய துபாய் காவல்துறை..!

dubai-pOLICE

துபாய் என்றவுடன் நம்மில் பலருக்கும் வண்ணமிகு கட்டிடங்கள், நீண்டு செல்லும் சாலைகள் திகைக்க வைக்கும் செல்வச் செழிப்பு ஆகியவை ஞாபகத்திற்கு வரலாம். இத்தனை பிரம்மாண்ட நகரத்தின் பாதுகாப்பிற்காக அல்லும் பகலும் உழைத்துவரும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

சாலைப் பாதுகாப்பு முதல் போதைப்பொருள் தடுப்பு வரையில் நாள்தோறும் பல சிக்கலான வழக்குகளை துரிதமாக முடித்துவரும் துபாய் காவல்துறையில் 2020 ஆண்டில் மிகக் குறுகிய காலத்தில் வழக்குகளுக்கு பதிலளித்த பிரிவாக பேட்ரோல் ‘512’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அல் முரக்காபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த வழக்குகளானது தீர்க்கப்பட்டிருக்கிறது.

சராசரியாக 1.17 நிமிடத்தில் வழக்குகள் குறித்த நடவடிக்கையை இந்த பேட்ரோல் ‘512’ எடுத்துள்ளது. இதற்கு முன்னர் வழக்குகள் மீது 2.48 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்ததே முதலிடத்தில் இருந்தது.

துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீபா அல் மர்ரி பேட்ரோல் 512 அமைப்பிற்கு விருதினை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வில் குற்றவியல் விசாரணைப் பிரிவு துணைத் தளபதி மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹீம் அல் மன்சூரி, அல் முரக்காபாத் காவல் நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் அல் கனிம், அல் முரக்காபாத் காவல்நிலையத்தின் துணை இயக்குனர் கர்னல் இஸா அகமத் சலீம் மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

dubai-pOLICE
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap