UAE Tamil Web

அஜ்மானில் பெரும் தீ விபத்து.. 10 டீசல் லாரிகள் எரிந்து சேதம்..!

அஜ்மான் குடிமைத் தற்காப்புக் குழுக்கள், அஜ்மான் காவல்துறையின் ஒத்துழைப்புடன், நேற்று அதிகாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அஜ்மான், அல் ஜுர்ஃப் 2வது தொழில்துறை பகுதியில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த இரண்டு எரிபொருள் நிறுவனங்களுக்குச் சொந்தமான 10 டீசல் லாரிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து அஜ்மான் சிவில் டிஃபென்ஸ் ஜெனரல் உபைத் அல் ஜாபி கூறுகையில், “அல் ஜுர்ஃப் பகுதியில் உள்ள தீயணைப்பு அதிகாரிகள், அஜ்மான் காவல்துறையின் ஒத்துழைப்புடன் சம்பவ இடத்திற்கு சென்று அருகில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

இந்த சம்பவம் அதிகாலை 1.40 மணியளவில் நிகழ்ந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அல் ஜாபி கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap