UAE Tamil Web

ரமலானின் போது துவக்கப்பட்ட அமீரகத்தின் ‘10 மில்லியன் உணவு திட்டம்’.! பல சர்வதேச விருதுகளை பெற்று சாதனை..

meals

அமீரகத்தில் இந்த ஆண்டு ரமலானின் போது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக தொடங்கப்பட்ட ‘10 மில்லியன் உணவு திட்டம், பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.

- Advertisment -

படைப்பாற்றல் மற்றும் புதுமைகளில் 6 க்ரெஸ்டா விருதுகளையும் (Cresta Awards), சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக 5 ஷார்ட்டி சமூக நல் விருதுகளையும்(SHORTY Social Good Awards) 10 மில்லியன் உணவு திட்டம் வென்றுள்ளது. இந்த முயற்சி டிஜிட்டல் வடிவமைப்பில் க்ரெஸ்டாவின் தங்க விருதை பெற்றது.

ஷார்ட்டி சமூக நல் விருதுகளின் சிறந்த அவசர நிவாரணம், பசி மற்றும் வறுமை நிவாரணத்திற்கான சிறந்த பணி, அரசு மற்றும் அரசியலில் சிறந்த பணி, சிறந்த தரவு காட்சிப்படுத்தல் மற்றும் நிகழ் நேர பதிலில் தங்க விருது உள்ளிட்ட 5 பிரிவுகளில் 5 விருதுகளை வென்றுள்ளது 10 மில்லியன் உணவு திட்டம்.

மேலும் இந்தத் திட்டம் அதன் புதுமையான யோசனை, வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தலுக்காக 2020-ஆம் ஆண்டின் மத்திய கிழக்கில் மெப்ரா(MEPRA) விருதின் சிறந்த பிரச்சாரத்திற்காக பட்டியலிடப்பட்டது. இந்த 10 மில்லியன் உணவுத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுமார் 15.3 மில்லியன் உணவை பெற்று தந்துள்ளது.

இந்த திட்டம் அமீரகம் முழுவதும் ஒற்றுமையின் ஒரு பெரிய நகர்வை உருவாக்கியது.குடிமக்கள் மற்றும் 115 க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெரும் நிதி மற்றும் நன்கொடைகள் இதற்காக ஈட்டப்பட்டது. நன்கொடை உணவை விநியோகிக்க அமீரகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவினர்.

அதே போல ’10 மில்லியன் உணவு’ திட்டத்தை ஆதரிப்பதற்காக தொடங்கப்பட்ட‘ உலகின் மிக உயரமான நன்கொடை பெட்டி(World’s Tallest Donation Box) 34 சர்வதேச பரிந்துரைகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.