துபாயில் 10 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்திய தொழிலாளி கைது..!

Arrested
10-year-old girl groped inside lift in Dubai by supermarket worker

10 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக சூப்பர்மார்க்கெட் தொழிலாளி மீது துபாய் நீதிமன்றத்தில் (Dubai Court of First Instance) வழக்கு தொடரப்பட்டுள்ளது.

23 வயதான இந்திய நாட்டை சேர்ந்த அவர், சூப்பர்மார்க்கெட் விற்பனையாளராக பணிபுரிகிறார். இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கென்ய சிறுமியை தவறான முறையில் சீண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த நாளில், தனது மகளை தங்கள் கட்டிடத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கொஞ்சம் ரொட்டி வாங்கிவர சொன்னதாக சிறுமியின் தாய் வழக்குரைஞர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் “நேரம் காலை 10 மணிக்குள் இருக்கும், சில நிமிடங்கள் கழித்து அவள் திரும்பி வந்து, பயம் கலந்த நடுக்கத்துடன் காணப்பட்டால். பிறகு காவல்துறையை அழைக்கும்படி அவள் என்னிடம் சொன்னாள்” என்று சிறுமியின் அம்மா கூறினார்.

தனது மகள் சொன்னதை விவரித்த அவர், “பல்பொருள் அங்காடி ஊழியர்கள் அதே தளத்தில் தங்கியிருப்பதால் சிறுமி அவரை லிப்டில் பார்த்துள்ளார். அவர் ரொட்டி வாங்கிய பிறகு காத்திருக்கச் சொல்லி, பின்னர் அவர் பின்தொடர்ந்து லிப்ட்டுக்கு தவறான முறையில் சீண்டியுள்ளார். ”

லிப்ட்-இல் பிரதிவாதி தன்னை நீண்ட நேரம் பார்த்து கொண்டே இருந்தார், பிறகு தன்னை தவறான நோக்கத்துடன் தொட்டதாக சிறுமி கூறியுள்ளார்.

மேலும், “அவர் என் வாயை அவரின் கையால் மூடியதால் என்னால் உதவிக்காக சத்தம்போட முடியவில்லை,” என்று சிறுமி விசாரணையில் தெரிவித்தார்.

பிறகு சிறுமியின் பெற்றோர், கட்டிடத்தின் பாதுகாப்பு காட்சிகளை வைத்து பார்த்ததில் லிப்டின் வெளியே சிறுமியின் பின்னால் தொழிலாளி நடந்து கொண்டிருந்த காட்சிகள் சிக்கின.

இதுகுறித்து அல் குசைஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், குற்றவாளிக்கு வரும் பிப்ரவரி 20ம் தேதி தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Khaleej Times

Loading...