இணையவழியில் மிரட்டி பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக பொதுநல வழக்குத்துறை எச்சரித்துள்ளது. அமீரகத்தில் இணைய வழி குற்றங்களை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இணையவழியில் யாரையேனும் மிரட்டி (Black Mail) பணம் பறித்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 250,000 திர்ஹம்ஸ் முதல் 500,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூடுதல் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க நேரிடும் என அமீரக பொதுநல வழக்குத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு ஆளானவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
