UAE Tamil Web

துபாய்: ஏலத்தில் விடப்பட்ட 118 கேரட் அரியவகை வைரம் – விலை என்னன்னு தெரியுமா..?

DIAMOND

துபாய் டைமண்ட் எக்ஸ்சேஞ் – ல் இன்று 118.58 கேரட் அரியவகை வைரம் ஒன்று ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தினை பிரபல ட்ரான்ஸ் அட்லாண்டிக் ஜெம்ஸ் சேல்ஸ்  (TAGS) நிறுவனம்  நடத்தியது.

ரஃப் டைமண்ட் எனப்படும் இவ்வகை வைரம் அரிதானது என்பதால் 5.218 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த வைரம் ஏலம் போயிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 87 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வைரங்கள் இங்கே ஏலம் விடப்பட்டன.

அதற்குப் பிறகு இதுதான் அங்கே நடந்த பெரிய ஏலமாகும். இந்தியாவின் சூரத், மும்பை, இஸ்ரேல், அங்கோலா, தென்னாப்பிரிக்கா, ரஷியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இங்கே அதிகளவில் வைரங்கள் கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த துபாய் டைமண்ட் எக்ஸ்சேஞ் சுமார் 1000 வைர நிறுவனங்களை உள்ளடக்கியது. ஆகவே உலகின் மிகச்சிறந்த வைரங்கள் இந்த அமைப்பின் மூலமாகத்தான் விற்பனை செய்யப்படுகின்றன.

DIAMOND
1 Share
Share via
Copy link